பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டில் பல கட்டிடங்கள் அழிவடைந்தாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, ரிக்டர் அளவுகோலில் 7.8 கொண்ட இந்த நிலநடுக்கம், திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7:40 மணிக்குச் சற்று முன்னதாக (ஞாயிற்றுக்கிழமை இரவு 23:40 GMT) தெற்கு மின்டானோ தீவுக்கு அப்பால் ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனத்தின் (PHIVOLCS) கூற்றுப்படி, ஆரம்ப நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பின் அதிர்வுகள் ஏற்பட்டன.
மின்டானோவின் ஜெனரல் சாண்டோஸ் நகரில், ஜாலிபீ உணவகம் இயங்கி வந்த மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று, இடிபாடுகளும் தூசியும் சூழ்ந்த நிலையில் இடிந்து விழுவதைக் காட்டும் காணொளிகள் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின.
சொக்ச்க்சார்ஜென் என்ற தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அந்த நகரம், அதன் உள் தீவிர அளவுகோலில் 10க்கு 7 என்ற அளவில் "மிகவும் வலுவான" நிலநடுக்கத்தை அனுபவித்ததாக பிலிப்பைன்ஸ் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்படக்கூடிய உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
