சின்ன முல்லைத்தீவில் ரகசிய தகவலால் சிக்கிய நபர்.



அக்கரைப்பற்று - சின்ன முல்லைத்தீவு பிரதேசத்தில் கேரளா கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் சாஜன் மாணமடு தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பிரதேசத்திற்கு சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்த 5050 மில்லி கிராம் கஞ்சாவையும்110 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் கைப்பற்றியிருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (26) ஆஜர்படுத்திய போது செப்டம்பர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


கருத்துரையிடுக

புதியது பழையவை